திருவிளக்கு பூஜை
திருவிளக்கு பூஜை
07/02/2025 தை வெள்ளி அன்று, திருவாரூர் திருநீலகண்டேஸ்வரர் கோயிலில், திருவாரூர் மாவட்ட தொண்டை மண்டல முதலியார் சமூக திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
திருவிளக்கு பூஜை இறை அருளாலும் நம் சமூக பெரியோர்களின் ஆசியாலும் மற்றும் அனைவரின் பங்களிப்பாலும் சுமார் 120 சமூக உறவுகள் கலந்துகொள்ள சிறப்பாக நடைபெற்றது.
பூசை நிறைவு பெற்ற உடன் நைவேத்தியம் செய்யப்பட்ட சர்க்கரை பொங்கல், புளிசாதம், கொண்டக்கடலை அனைவருக்கும் பிரசாதமாக வினியோகம் செய்யப்பட்டது.
நூறு டப்பாக்கள் சர்க்கரை பொங்கல், புளிசாதம் பையில் போட்டு தேங்காய், வாழைப்பழம், வெற்றிலை பாக்கு,மஞ்சள்,வளையல், விபூதி, குங்குமம் இவற்றுடன் விழாவில் கலந்துகொண்ட உறவுகளுக்கு வீட்டுக்கு கொண்டு செல்ல கொடுக்கப்பட்டது.
விழா சிறப்பாக நடைபெற்றது என்ற அனைவரின் பாராட்டுக்களுடன் இறையருளால் திருவிளக்கு பூஜை இனிதே நிறைவுற்றது.
அன்பு உறவுகளுக்கு வணக்கம்
கடந்த 07/02/2025 தை கடைசி வெள்ளியன்று திருநீலகண்டேஸ்வரர் கோயிலில் நடைபெற்ற நம் சமூக திருவிளக்கு பூஜையில் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்த தாங்கள் ஒவ்வொருவருக்கும் உள்ளம் நெகிழ்ந்த நன்றிகள்.
10 நாட்களில் சிந்தையில் உதித்து நம் அனைவரையும் ஒரே வேரின் விருட்சமாக தூக்கி நிறுத்திய அற்புதமாக நிகழ்வு இது.
நம் உறவுகளுக்கு நேரில் பத்திரிக்கை கொடுக்க சென்றபோது ," நாங்கள் கண்டிப்பாக கலந்து கொள்கிறோம்" என்ற அவர்களின் உற்சாக மொழிகளே இந்த விழா சிறப்பாக அமைய காரணம்.
நம் சமூக மூத்தோர்களின் பொறுப்பான பிரியமான ஊக்க மொழிகள், இளையோரின் இன்முக சம்மதங்கள், இறையருள் இவையெல்லாம் ஒன்று சேர்ந்தே இந்த திருவிளக்கு பூசையை நடத்தி உள்ளது.
இப்போது ஒருங்கிணைப்பாளர்களாகிய எங்களுக்கு அதிக பொறுப்பையும், கடமை உணர்வையும் செலுத்தி உள்ளது இவ்விழா. நம் சமூகத்துக்கு இயன்ற சேவையை ஆற்றி தாங்கள் ஒ வ்வொருவரின் அன்புக்கும் அணி சேர்க்க வேண்டும் என்பதே எங்களின் ஆழ்மனதின் பதில்.இவ்விழாவின் சிறு சிறு குறைகளை மன்னிக்கவும். இளைய சமுதாயத்தை சில காலங்களில் தயார் செய்தால் இக் குறைகள் நீங்கி எதிர்காலத்தில் நிறைவையே காண்போம்.
கல்வி, ஆரோக்கியம், சமூக பழக்கவழக்கங்கள் இவற்றில் இளையோரை மெருகேற்றுவதும், பெரியோரை பரிவுடன் உடல், மனதளவில் பாதுகாத்தும் அவர்கள் ஒவ்வொருவரின் செறிந்த அனுபவம், ஆளுமை இவற்றை உள்வாங்கியும், பின் வரும் சந்ததியருக்கு சரியாக கடத்துவதுமே ஒரு முழுமையான சமூக தவமாக இருக்கும். இதன் ஒவ்வொரு படிகளையும் உங்கள் ஒவ்வொருவரின் அன்பினாலும், ஆசிகளாலும் நாங்கள் கடப்போம்.
திருவிளக்கு பூஜையில் வயது ஒரு தடையல்ல என்று அயராது உழைத்த சமூக பெரியோர்கள் குறிப்பாக இலுப்பூர் சந்திரசேகரன் சார், சேந்தமங்கலம் கோவிந்தராஜன் சார், புலிவலம் புலவர் பாலசுப்ரமணியன் சார், தமிழ்குடில் லதா இளங்கோ மேடம், இலுப்பூர் பெண்டிர்கள் மற்றும் ஆர்வமாக பூஜை வேலைகளுக்கு உதவிகளை செய்த நம் சமூக பெண்டிர்கள் ATP நகர் திருமதி. ராஜராஜேஸ்வரி மணி, காவாலகுடி திருமதி கலா கண்ணன், மேலும் பவித்திரமாணிக்கம் செந்தில்குமார் உள்ளிட்ட எல்லா ஒருங்கிணைப்பாளர்கள், சேந்தமங்கலம் திரு கோவிந்தராஜன் அவர்களின் பெயர்த்திகள் செல்வி மற்றும் பெரியோர்கள்,இளையோர்கள் என்று விழாவில் பங்களிப்பு அளித்த அனைவருக்கும் எங்களது நெஞ்சார்ந்த நன்றிகள்.
இந்த திருவிளக்கு பூசை நம் சமூக மக்களின் வாழ்வில் ஒளியையும், மேன்மையையும் மகிழ்ச்சியையும் ஒற்றுமையையும் பெருமையும் தரும் என்பதில் விழா ஒருங்கிணைப்பாளர்களாகிய எங்களுக்கு சிறிதும் சந்தேகம் இல்லை.
மறுபடியும் விரைவில் சந்திப்போம்.....இன்னும் உற்சாகத்தோடு, உரிமையோடு, மகிழ்வோடு, நிறைவோடு.
நன்றியுடன் :
ஒருங்கிணைப்பாளர்கள்:
காவாலகுடி K.கண்ணன்
மேப்பலம் S.மதியழகன்
ஜி ஆர் டி கார்டன் R.செந்தில்குமார்
ஆவின் S.அனந்தராமகிருஷ்ணன்
லக்கி ஸ்டோர்ஸ் V.கார்த்திகேயன்
இலுப்பூர் S.சந்திரசேகரன்
பாரத வங்கி G.ராஜவேல்
சேந்தமங்கலம் C.கோவிந்தராஜன்
திரு வி க நகர் V.செந்தில்குமார்
வான்படை S.கார்த்திகேயன்
வடபாதிமங்கலம் S.வைத்திலிங்கம்
பவித்திரமாணிக்கம் T.K.வெங்கடேஷ்
புலிவலம் S.கல்யாண்குமார்
நன்னிலம் K.சந்துரு
அத்திபுலியூர் S.சிவராமன்
சாத்தங்குடி A.கரிகாலன்
கீழையூர் S.ரவி
நம் சமூக மகளிர் மற்றும் உறவுகள்.